135) தமிழால் உன் புகழ் பாடி |
தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா எனைச்சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது துணையாகி உனையாள்பவா 2 மன நோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு 2 குணமாக்க வருவாயப்பா - எனை உனதாக்கி அருள்வாயப்பா உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும் வழிகாட்டும் ஒளியானவா 2 நீ தானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீ தானே 2 நாதா உன் புகழ் பாடுவேன் - எனை நாளெல்லாம் நீ ஆளுவாய் |