185)மேய்ப்பனவன் குரல் கேட்டு |
மேய்ப்பனவன் குரல் கேட்டு கூடிடும் மந்தையாக இறைவா நின் குரல் கேட்டுக் கூடினோம் ஒன்றாக பெருங்குருவும் பலிப்பொருளும் சுதன் என அறிந்தோம் திருமகனின் குருகுலமாய் பலியிட வருகின்றோம் அறுவடையின் மிகுதிதனை அறிந்தே வருகின்றோம் ஆட்களின் குறைதனையே உணர்ந்தே தருகின்றோம் என் ஆன்மா கறைகளையே நீக்கி ஏற்றருளும் உன் வரத்தால் எங்களையே வெண்பனி நிறமாக்கும் நீ என்றும் எனை மறவா நிலைதனை ஈந்தருளும் யாம் என்றும் நிலை பிரியா நெறியையும் தந்தருளும் ஆசையுடன் அழைப்பேற்று தேவா விரைந்தோமே ஆர்வமுடன் நின்னரசில் உழைத்திட வந்தோமே |