66)இறைகுலமே இணைந்திடுவோம் |
இறைகுலமே இணைந்திடுவோம் இறைபலியில் கலந்திடுவோம் அனுதினம் அவரைத் தேடிடுவோம் அன்புடன் அவர் பதம் நாடிடுவோம் வாருங்கள் வாருங்கள் கூடிடுவோம் வல்லவர் யேசுவைப் போற்றிடுவோம் (2) தாயின் கருவினிலே தயவாய் தெரிந்தெடுத்தார் உள்ளங்கையினிலே நம்மை பொறித்து வைத்தார் கண்ணின் மணி போல் காக்கும் தேவன் கருத்தாய் நம்மைக் காக்கின்றார் (2) வாருங்கள் வாருங்கள் கூடிடுவோம் வல்லவர் யேசுவைப் போற்றிடுவோம் (2) உலர்ந்த எலும்புகளே உயிர்த்து எழுந்திடுவோம் உலரும் வாழ்வினிலே புனிதம் காத்திடுவோம் அன்பின் தேவன் நம்மை என்றும் அரவணைத்துக் காக்கின்றார் (2) வாருங்கள் வாருங்கள் கூடிடுவோம் வல்லவர் யேசுவைப் போற்றிடுவோம் (2) |