150)நீதியின் தேவனைக் காண |
நீதியின் தேவனைக் காண
வாருங்கள் ஆ . . . ஆ . . . ஆ
கூடுங்கள் ஆ . . . ஆ . . . ஆ ஆலயம் வாருங்கள் ஆ . . . ஆ . . . ஆ பல்லவி நீதியின் தேவனைக் காண வாருங்கள் நிறைவாய் அருளை அடைய வாருங்கள் சமநீதி நாளும் மலர்ந்திடவே சமத்துவ தேவன் அழைக்கின்றார் வாருங்கள் வாருங்கள் இன்று இறைமக்களே வாழுங்கள் வாழுங்கள் இனி இறைவனிலே - 2 சரணம் உண்மை வாழ்வாக்க நேர்மை உணர்வாக்க தியாக தேவனின் பலிநமதே பணியேற்க அல்லாமல் பணிபுரிய அழைக்கும் இயேசுவின் தாகம் நம் வாழ்வாகட்டும் வருவோம் ஆலயம் - 2 மகிழ்வோம் அன்பனில் - 2 மகிழ்வோம் இயேசுவில் - 2 சாதியம் ஒழிந்நிட சமத்துவம் நிலைத்திட தன்னையே பலியாக்க அழைக்கின்றது என்றும் பகைமை நாடா நல்வாழ்வுக்கு அழைக்கும் இயேசுவின் வேதம் நம் வாழ்வாகட்டும் வருவோம் ஆலயம் - 2 மகிழ்வோம் அன்பனில் - 2 மகிழ்வோம் இயேசுவில் - 2 |