183) மனங்கள் மகிழக் கரங்கள் |
மனங்கள் மகிழக் கரங்கள் கோர்த்து இணைந்து செல்லுவோம் - மனித உறவில் மலர இறைவன் உறவில் சங்கமமாகுவோம் கொண்டாடுவோம் உறவினையே - அவர் வழியில் மனிதம் புனிதமடைய உறவினை வளர்ப்போம் சாதி சமய மொழிகளாலே சண்டைகள் எதற்கு படைப்பினிலே சிறந்தவராம் மனிதர்கள் நமக்கு உயர்வு தாழ்வு நீக்கி உண்மை உறவினை வளர்ப்போம் விண்ணும் மண்ணும் இணைந்திடப் புதுப்பாலம் அமைப்போம் வாழும் நாட்கள் கொஞ்சக் காலமே மாற்றங் காண மனங்கள் மாறுவோம் - இயேசு வேண்டும் என்று புதிய சமூகமே - நாம் ஒன்று சேர்ந்து உருவாக்குவோம் கொண்டாடுவோம் உறவினையே அவர் வழியில் மனிதம் புனிதமடைய உறவினை வளர்ப்போம் தவறைப் பொறுத்து பிறரை ஏற்று நிறைவினைக் காண்போம் மனித உறவில் வசந்தம் மலர குறையினைக் களைவோம் பிறரை ஏற்று நம்மைப் போல நடத்திட முயல்வோம் உறவில் உண்மை அன்பை விதைத்து வளர்த்திட முனைவோம் வாழும் நாட்கள் கொஞ்சக் காலமே மாற்றங் காண மனங்கள் மாறுவோம் - இயேசு வேண்டும் என்று புதிய சமூகமே - நாம் ஒன்று சேர்ந்து உருவாக்குவோம் கொண்டாடுவோம் உறவினையே அவர் வழியில் மனிதம் புனிதமடைய உறவினை வளர்ப்போம் |