Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் வருக வருக இணைந்து  

வருக வருக இணைந்து வருக
வாழ்வைத் தேடுவோரே
வாழ்வைப் பலியில் இணைந்து வாழ்ந்தால்
வானகம் மண் மலரும்- 2
ஆ....ஆ...ஆ...லலல.....லா- 2

இன்று போல் என்றும் இனி இல்லை-இது
இறைவன் தந்த அருள் திருநாள்
நாளை என வரும் கேள்வியிலே-அது
நமதெனப் பதில் தரத் துணிவுண்டோ
நேற்று வாழ்ந்த வாழ்வறிவோம்- அது
காற்றில் கலந்ததை உணர்வோம்- 2
இந்த பலியின் தலைமகன் இயேசுவையே
நாம் படிப்பினை ஆக்கிப் பயணம் செய்வோம்

ஒன்றாய் வாழ்தல் நன்றன்றோ-அதை
கண்டார் கனவாய் நம் இயேசு
பகையும் போரும் வன்முறையும்-நாம்
பகையெனக் கொள்வோம் நம் மறைவில்
ஆளல் அடக்கல் முறை ஒழிந்தால்-இறை
ஆட்சி ஒளிரும் தெருவெங்கும்- 2
இந்த உலகமே இனிய ஓர் அன்பியமாம்
இதை உணர்ந்தே பலிதனில் ஒன்றிணைவோம்.









 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்