12) அழைப்பின் குரல் கேட்டேன் |
அழைப்பின் குரல் கேட்டேன் என் ஆண்டவன் என உணர்ந்தேன் - 2 அருகினில் தயங்கி நடை பயின்றேன் - பின் வாவென முன் சென்றார் - 2 எளியவர் இழிந்தவன் நானன்றோ - எனைத் தெரிந்தும் அழைத்ததும் ஏன் என்றேன் வலியவர் கண்டு நாணிடவே - பின் வாவென முன் சென்றார் - 2 அறிவினில் சிறியோன் நானன்றோ - அதை அறிந்தும் எனை நீர் விரும்பியதேன் அறிஞர்கள் கண்டு நாணிடவே - பின் வாவென முன் சென்றார் - 2 |