140) தீபங்கள் கரம் ஏந்தி |
தீபங்கள் கரம் ஏந்தி திருக்கோயில் படி ஏறினேன் திரியேக தேவன் உந்தன் திருத்தாள் பணிகின்றேன் நற்செய்தி நானாக நானிலம் உனது அரசாக ஆவியில் அர்ச்சித்து எனையனுப்புவாய் இருளும் அருளும் மங்கிய விழிகளில் அருளும் ஒளியும் அளித்திட -2 அழுகியும் ஒழுகியும் போன மனங்களை தழுவி அணைத்து உன்முகம் காட்டிட - 2 ஒதுங்கியும் பதுங்கியும் ஓடிய உள்ளங்களை விடுதலை இறையரசில் இணைத்திட - 2 ஆ ஏழ்மையில் கீழ்மையில் அடிபடுவோர்க்கு விடுதலை வாழ்வு ஈந்திட - 2 ஓலங்கள் அவலங்கள் கேட்பவர்க்கு நற்செய்திக் கீதம் முழங்கிட - 2 காயமும் அபாயமும் சுமந்து கொண்டு இருப்போர்க்கு அருள் தரும் ஆண்டினை அறிவிக்க -2 ஆ |