Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  18) அன்பினில் பிறந்த  



அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே (2)

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருளொளி வீசும் ஒரு வழி போவோம் (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் (2)
ஒருமையில் இறைவன் திருவுள்ளம் காண்போம்

பிறப்பிலும் யேசு இறப்பிலும் நம்மை
பெருமை செய்தாரே புனித பேரன்பால் (2)
பிறந்த நம் வாழ்வில் பயன் பெற வேண்டும் (2)
பிறரையும் நமைப் போல் இணைத்திட வேண்டும்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்