154) பரிசுத்த குலமே |
பரிசுத்த குலமே நீங்கள் பலியிட வாருங்கள் இறைவனுக்குரியவர்கள் - என்றும் இறைபுகழ் கூறுங்களே அரசக்குருத்துவமே தூய ஆவியின் ஆலயமே இறைவன் அழைத்த இனமே - இதை அறிந்து வாழ் மனமே ஒளியின் மைந்தர் நீங்கள் - இந்த உலகினில் ஒளிர்ந்திடுங்கள் முடிவில்லா வாழ்வதையே நீங்கள் முதன் முதல் தேடுங்கள் மறையுடல் உறுப்புக்களாய் - என்றும் ஒன்றித்து வாழ்ந்திடுங்கள் இறைவாக்குரைப்பவராய் - இந்த இகமதில் திகழ்ந்திடுங்கள் தந்தை இறைவனின் சிறுமந்தையும் நீங்கள் ஆயனின் மேய்ச்சலில் - புது வாழ்வையும் கண்டிடுங்கள் அக ஒளி ஏற்றிடவே தெய்வ அருள் ஒளி பெற்றிடுங்கள் பெற்ற இப்பெருவாழ்வை - இங்கு பிறருடன் பகிர்ந்திடுங்கள் |