Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   196) வாரீர் இறையடி தொழவே வாரீர்  

வாரீர் இறையடி தொழவே வாரீர்
அருள்தனைப் பெறவே வாரீர்
திரண்டிடும் அலையென முகிழ்ந்திடும் மழையென
மகிழ்ந்து விரைந்து வாரீர்

மஞ்சள் முகம் மீது மங்களப் புன்னகை
பொங்கிட மங்கையர் வாரீர்
வஞ்சம் துளி கூட இன்னும் நுழையாத
பிஞ்சு மனங்களே வாரீர்
வங்கக் கடல் போல பொங்கும் உளம் கொண்ட
தங்கத் தமிழரே வாரீர்
தங்கள் பணி தீர்த்த நெஞ்ச நிறைவோடு
தாங்கும் முதியவர் வாரீர்

வறுமைப் பிணியாலே வாழ்வு சுமையாகி
வாடும் சோதரர் பாரீர்
விழிகள் குளமாகி வழியும் நீர் தேக்கி
விம்மும் குரலினைக் கேளீர்
சிறிய சோதர்க்கு செய்த பணியெல்லாம்
தேவன் பணிதானே என்ற
அரிய உண்மையினை அறிந்து அன்புவரம்
அடைய இன்றே வாரீர்

தரணி மீட்பதற்கு இறையின் ஏகமகன்
இயேசுவே இங்கு வந்தார்
வருந்தி மலைமீது இறந்து உயிர்த்து நாம்
இழந்த வாழ்வுதனை வென்றார்
அடைந்து அவர் தந்த அருளின் திரு வாழ்வை
விசுவாசத்தால் நாம் பெறுவோம்
தடைகள் எதுவுமில்லை வரங்கள் பெறுவதற்கு
விரைந்தே நாமும் வருவோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்