Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  65) இறை உறவில் மலர்ந்திடுவோம்  

இறை உறவில் மலர்ந்திடுவோம் இணைந்து வாருங்கள்
இனிய தேவன் தந்த பலியில் மகிழ்ந்து கூடுங்கள்
வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள்

உதயமாகும் இனிய உறவு வாருங்கள்
உலகில் சென்று பலன் தரவே கூடுங்கள்
பகிரும் உள்ளம் நாம் பெறுவோம் வாருங்கள்
நாம் பரமன் அன்பில் வாழ்ந்திடுவோம் கூடுங்கள்
வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள்

சுமை மறந்து சுகம் பெறுவோம் வாருங்கள்
இமை திறந்து விடியல் காணக் கூடுங்கள்
இருள் மறைந்து ஒளி நிறையும் வாருங்கள்
நாம் அருள் வாழ்வில் மகிழ்ந்திடுவோம்; கூடுங்கள்
வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள்

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்