56) இயேசுவின் அன்பை |
இயேசுவின் அன்பைக் கொண்டாடுவோம் அவர் திருப்பலியில் ஒன்றாகுவோம் - 2 - நாம் அழைக்கப்பெற்றோம் பேறுபெற்றோம் அவரில் மீட்படைந்தோம் - நாம் அழைக்கப்பெற்றோம் பேறுபெற்றோம் அவரில் வாழ்வடைந்தோம் - 2; சரணம் அனைவரும் வாழ்வுறவே அவர் ஆற்றிய திருப்பலியை அவர் நினைவாய்க் கொண்டாடியே அன்பின் பொருள் உணர்வோம்-2 அவர் திரு இரத்த உறவில் நாம் சோதரராவோம் - 2 அப்பத்தை பிட்டுக் கொடுத்து அவர் தன்னையே கையளித்தார் பிறர் வாழ தன்னை இழக்கும் வாழ்வே பலி என்றார் - 2 சுயநலம் உடைத்தெறிந்து நாம் இறைமக்களாவோம் - 2 |