Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து  

குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து
திருப்பலி நிறைவேற்றுவோம்
தன்னலம் மறந்து பிறநலம் காக்கும்
திருச்சபை ஆகிடுவோம்
நாம் வருவோம் பலியில் இணைவோம்
இறையன்பில் நாமும் வளர்வோம்

கடவுளைத் தேடும் அறிவே உலகில்
ஞானத்தின் முதல்நிலை-அந்த
ஞானத்தில் நிலைத்து தியாகத்தில் வாழ்ந்தால்
அதுவே இறை நிலை
இயேசுவின் தலைமையில் இறையாட்சி மலர
இறைமக்கள் வருவோம் இறைவனைப் புகழ்வோம்

நம்பிக்கையோடு வாழ்ந்திடும்போது
மானுடம் உயர்வு பெறும்-இறை
நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடும்போது
வாழ்வே முழுமை பெறும்
தந்தையை நம்பி தன்னுயிர் தந்த
இயேசுவின் பலியில் நாமும் இணைவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்