Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் இன்னிசை பாடி உன்  

இன்னிசை பாடி உன் இல்லம் தேடி வருகிறோம்
வருகிறோம் வருகிறோம் இல்லம் தேடி வருகிறோம்
நிம்மதி தேடி உன் உள்ளம் நாடி தொழுகிறோம்
தொழுகிறோம் தொழுகிறோம் உள்ளம் நாடி தொழுகிறோம்

உன்னத தேவனே உண்மையின் வேந்தனே
உன் அருள் வேண்டினோம் உன் புகழ் பாடினோம்
வருகிறோம் வருகிறோம் இல்லம் தேடி வருகிறோம்
தொழுகிறோம் தொழுகிறோம் உள்ளம் நாடி தொழுகிறோம்


அன்னையின் கருவிலே அறிந்த என் இறைவனே
அன்பெனும் சிறகிலே அணைக்கும் என் தகப்பனே (2)
உன் மொழி கேட்கவே உன் வழி ஏற்கவே
நம்பிக்கை வளரவே நன்மையில் வாழவே
ஆலயமணி ஓசை கேட்டு மனம் ஆர்வமாய்
ஒன்று கூடினோம் பணிகிறோம் தொழுகிறோம்


உன்னத பலியிலே இணையும் நல் பொழுதிலே
உள்ளங்கள் மகிழ்விலே நிலைக்கும் என் தேவனே
எம் பிழை நீங்கவே உன் துணை காணவே
உன்னெண்ணம் அறியவே உண்மையில் வாழவே
ஆலயமணி ஓசை கேட்டு மனம் ஆர்வமாய்
ஒன்று கூடினோம் பணிகிறோம் தொழுகிறோம்







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்