34) ஆலயத்தின் வாசலிலே |
ஆலயத்தின் வாசலிலே கானங்கள் கேட்கின்றது தேவாலயத்தில் நுழைகையிலே ஆனந்தம் பிறக்கின்றது தேவா உன் ஆலயம் வந்தோம் திருப்பாதம் வணங்கியே நின்றோம் அருட்கடலே உனைப்பணிந்தோம் ஆனந்தம் ஆனந்தமே விண்ணகத்தில் தேவனுக்கு மகிமை உண்டாகுக மண்ணகத்தில் மாந்தருக்கு அமைதியும் ஆகுக விண்ணவரும் மண்ணவரும் வாழ்த்துக்கள் பாடவே இறைமகனாம் இயேசுவின் திருவுளத்தை அறிந்திட இறையரசின் விழுமியங்கள் எமது வாழ்வில் துலங்கிட வழித்துணையாய் ஒளிவிளக்காய் உள்ளத்திலே வாருமே |