172) புலன்களைக் கடந்த புது ஒளியே |
புலன்களைக் கடந்த புது ஒளியே - உனை வலம் வரும் உலகை வனைந்திடுவாய் பகல்தர எழுந்த பர ஒளியே - உனை அகல்பவர் இடறும் வினையடைவர் இகபரம் இணைக்கும் நிலையொளியே - உனில் புகுந்திட உலகின் வழிதிறப்பாய் மன இருள் படலம் அகற்றிடுவாய் - உனை நினைந்திட அறிவில் ஒளிர்ந்திடுவாய் தினமுனில் விழித்து எழவைப்பாய் - எனை உனதொளி கதிராய்ச் சுடர வைப்பாய் கதிரவன் மலரை மலர வைப்பான் - எனில் மதி இருள் அகற்றி மகிழ வைப்பான் உதித்திடும் ஒளியில் இருப்பவனே - உனை துதித்திட எழுந்தோம் திரு ஒளியே |