Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  17) அன்பினில் இணைந்த இறைகுலமே  


அன்பினில் இணைந்த இறைகுலமே
ஆவியில் மலர்ந்த புதுஇனமே - இறை
யேசுவின் அரசினை அமைத்திட - நீயும்
இறைவனின் அழைப்பினை ஏற்று வா ஆ - 4

எளிமை நிலையில் உள்ளோர் ஏற்றம் பெறுவர் என்று
உரைத்திட விரைந்திடுவாய்
அடிமை வாழ்வில் உள்ளோர் உரிமை யாவும் பெற
வழிதனைக் காட்டிடுவாய்
புதிய வானமும் புதிய பூமியும் மாந்தர் நம்மிலே மலர்ந்திடுக
வருக இறையே வருக, எழுக விரைந்து எழுக ஆ - 2

சிறையில் வாடும் பல மாந்தர் வாழ்வை இன்று
மாற்றிட எழுந்திடுவாய்
தனிமை தீவில் நின்று தவிப்போர் நிலையை கண்டு
துணிவினைத் தந்திடுவாய்
புதிய வானமும் புதிய பூமியும் மாந்தர் நம்மிலே மலர்ந்திடுக
வருக இறையே வருக, எழுக விரைந்து எழுக ஆ - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்