Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   124) காலையிலும் அந்தி மாலையிலும்  
காலையிலும் அந்தி மாலையிலும்
உனதாலயம் நாடி வந்தோம் (2)
உனதருள் வேண்டி இறை ஆசி பெறவே
ஆவலுடன் நாம் கூடி வந்தோம் - அதி

எம் மனக் கவலைகள் பறந்தோட
உனதடி நாடி வந்தோம் - நாம்
மனதினில் தீமைகள் அகன்றோட
உனதடி தேடி வந்தோம் - எம்
வாழ்வின் மகிழ்வினை நாம் வேண்டி
உன்னிடம் ஓடி வந்தோம் எம்மை மாற்றிடுவாய்
எம்மைத் தேற்றிடுவாய்
மனமகிழ்வினையே எமக்களிப்பாய்

உன் அடி பணிந்து நாம் வாழ
உனதருள் வேண்டி நின்றோம் - நாம்
உலகியல் மாற்றம் எம்மை தாக்க மனம்
உடைந்தே வாடி நின்றோம் - எம்
வாழ்வின் மகிழ்வினை நாம் வேண்டி
உன்னிடம் ஓடி வந்தோம் எம்மை மாற்றிடுவாய்
எம்மைத் தேற்றிடுவாய்
மனமகிழ்வினையே எமக்களிப்பாய்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்