இறை இயேசுவில் அன்பு நெஞ்சங்களே! இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். புனித லூர்து அன்னையின் பக்தர்களுக்காக www.lourdhu.net என்ற இணையதளத்தை உருவாக்கி, அதனை ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அன்னையின் மீது நம் தமிழ் உறவுகள் வைத்திருக்கும் பற்றும் பாசமும் இன்னும் வலுப்படவேண்டும் என்னும் நோக்கில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் செய்திகள், கட்டுரைகள் மற்றும் ஏனைய படைப்புகள் மூலமாக நீங்கள் பயன்பெற வேண்டுமென்று உங்களுக்காக செபிக்கிறேன். நற்செய்தி விழுமியங்களை வாழ்வாக்குவோம்! இறையாட்சியைக் கட்டியெழுப்புவோம்! படைப்புக்கெல்லாம் நற்செய்தியை அறிவிப்போம் ! இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க! அருட்தந்தை: லீனஸ் சொய்சா அ.ம.தி. Email : |
புனித
கன்னிமரியாளின் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் அன்னையின் பிள்ளைகள் உங்கள்
அனைவருக்கும் அன்னையின் ஆசீர் என்றும் இருப்பதாக! லூர்து அன்னை
திருத்தலத்திலே உங்களுக்காக நாளும் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.
குருத்துவ நினைவுநாள் இன்று அருட்தந்தை லீனஸ் சொய்சா, அ. ம. தி அவர்கள் தனது 34 குருத்துவ நினைவுநாளை லூர்து திருத்தலத்தில் கொண்டகின்றார். அருட்தந்தை லீனஸ் அவர்கள் பல வருடங்களாக லூர்து அன்னை திருத்தலத்தில் (பிரான்ஸ்) மரியன்னையை தேடிவரும் அனைத்து உலகவாழ் தமிழ் மக்களுக்காக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். பக்தியான, அன்பான, பாசமான, கண்டிப்பான, நேர்மைமிக்க, பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள அருட்தந்தை லீனஸ் அவர்கள் மக்களாலும், அனைத்து இறைபணியாளார்களாளும், அதிலும் விசேடவிதமாக லூர்து திருத்தலத்தில் பணியாற்றும் அனைத்து இறைபணியாளர்கள் மற்றும் இங்கு சேவை செய்யும் அனைத்து பொதுநிலையினர் உள்ளத்திலும் தனது ஏழ்மை மற்றும் நேர்மையினாலும் இடம் பிடித்த ஒரு மகிழ்ச்சியான குருவானவராவார். இன்றைய நாலில் விசேடவிதமாக நாங்கள் அருட்தந்தை லீனாஸ் சொய்சா, அ. ம . தி அவருக்காக எமது செபத்தில் மன்றாடுவோம். இறைவன் அவரை நிறைவாக ஆசீர்வதித்து, தனக்கு பணியாற்ற தேவையான உடல்நல சுகத்தையும், மற்றும் அனைத்து ஆற்றல்களையும் கொடுத்தருளும் படி இறைவனுடன் வேண்டி நிற்போம். கடைசியாக, லூர்து நகரில் தேவதாய் காட்சி கொடுத்து இவ்வருடம் 160 வருடங்கள் நிறைவுறுகின்றன. இந்த வருடங்களில் ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியன், டட்ச், டோச் மற்றும் ஸ்பானிஷ் என்ற இந்த 6 மொழிகளில் மாத்திரம் வழிபாடுகள் நடைபெற்றன, ஆனால் இன்று இறைவன் 7வது மொழியாக தமிழை அங்கீகரித்து, தமிழ் மக்களுக்கு பணியாற்ற அருட்தந்தை லீனஸ் சொய்சா அவர்களை இங்கு அனுப்பியுளார். ஆகவே, இறைவன் எமக்கு செய்கிற அணைத்து நன்மைக்காகவும் நன்றி கூறி மன்றாடுவோமாக. மேலும், லூர்து திருத்தலத்தில் எமக்காக இடைவிடாது செபித்து கொண்டிருக்கும் அருட்தந்தைக்காக நாமும் செபிப்போமாக! Rev. Fr. Joseph Geethaponkalan (Spain) |
|
Procession eucharistique de Lourdes du 29/08/16 | |
பணியாளர் தியானம் - சுவிஸ் - 2010 - வரவேற்புரை | |
பணியாளர் தியானம் சுவிஸ் - 2010 - part - 1 | |
பணியாளர் தியானம் - சுவிஸ் - 2010 part - 2 | |
பணியாளர் தியானம் - சுவிஸ் - 2010 part - 3 | |
பணியாளர் தியானம் - சுவிஸ் - 2010 part - 4 | |
பணியாளர் தியானம் - சுவிஸ் - 2010 part - 5 | |
|
|
இன்று (17-09-2019)
ல் தனது பிறந்த தினவிழாவைக் கொண்டாடி, லூர்து அன்னை அருளினால்
எம்மையும், எமது இணைய தளத்தையும் வழிநடத்தும் எமது அருட்தந்தை லீனஸ்
சொய்சா அவர்களுக்கு, நீர் செய்த சகல நன்மைகளுக்கும் நன்றி
கூறுகின்றோம். அவர்களின் வாழ்வில் உமது நன்மைத்தனங்களை எல்லாம் அள்ளிப்
பொழிந்து ஆசீர்வதியும். திருச்சபையின் பணிக்காக இந்த அடிகளாரைத் தந்த
பெற்றோரையும் குடும்ப உறவூகளையும் ஆசீர்வதியும். இந்நாளில் தூய ஆவியின்
அருளாலும், மரியன்னையின் ஆசீராலும் தொடர்ந்தும் அவர் உடல், உள நலன்கள்
பெற்று வாழவூம், திருச்சபையின் திருமறைப்பணியில் உறுதியோடு பணியாற்ற
தேவையான அருள் வரங்களையும் பெற்று வாழ வரமருள வேண்டுமென்று இறைவனிடம்
மன்றாடி வாழ்த்தி நிற்கும் இணையதள உறுப்பினர்கள் |
|
|
எல்லாப் புகழும் இறைவனுக்கே! |