Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  29) ஆண்டவரே உன் இல்லம் வருகிறேன்  


அலேலுயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலுயா அல்லேலூயா (2)
வருகிறேன் வருகிறேன் உன் இல்லம் தேடி வருகிறேன்
வருகிறேன் வருகிறேன் உன் அன்பைப் பாடி வருகிறேன் (2)

ஆண்டவரே உன் இல்லம் வருகிறேன் (வருகிறேன் - 2)
அடைக்கலம் நாடி உன் பீடம் வருகிறேன் (தொழுகிறேன் - 2)
ஆண்டவரே உன் இல்லம் வருகிறேன்
அடைக்கலம் நாடி உன் பீடம் வருகிறேன்
உன் வழி நடந்திட செபிக்க வருகிறேன்
வியத்தகு செயல்களை எண்ணி வியக்கிறேன்
அன்பினைப் பகிர்ந்திட வருகிறேன் - உன்
அருளினில் நனைந்திட வருகிறேன்
உள்ளதை உவப்புடன் தருகிறேன் - உன்
 ஒளியினில் வாழ்ந்திட விழைகிறேன்

தாயின் கருவில் எனைத் தேர்ந்து கொண்டாய்
கரங்கள் பிடித்து எனை அழைத்து வந்தாய்
இறைவா என் இறைவா என் ஆதாரம் நீயாகவா
இமைகள் போல எனைக் காத்து நின்றாய் - உன்
கரத்தில் என் பெயரைப் பொறித்து வைத்தாய்
இருளைப் பழிக்காமல் ஒளி ஏற்ற - என்
இதயம் கலங்காமல் உறவாட
உன் ஒளியினில் கலந்திடுவேன்

நானோ சிறுவனென்று விலகி நின்றேன்
ஏதும் அறியேனென்று தயங்கி நின்றேன்
இறைவா என் இறைவா என் நல்லாயன் நீயாகவா
உமது வார்த்தைகளைப் பேச பணித்தாய்
உமது பணிக்கு எனைத் தேர்ந்து கொண்டாய்
கடமை மறவாது பணி செய்ய - என்
கனவு நனவாக தினம் உழைக்க
உன் உறவினில் கலந்திடுவேன்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்