Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  60) இரக்கத்தின் இறைவா  

இரக்கத்தின் இறைவா இணைந்துள்ளோம் - உம்
திருவுளம் அறிந்திட இணைந்துள்ளோம்
ஞானத்தின் வழியில் நாங்கள் நடந்திட
திருப்பதம் கூடியுள்ளோம் - (இறை)

அகரமும் நகரமும் நீர்தானே
ஆட்சியும் மாட்சியும் நீர்தானே
பகலில் மேகத் தூணாய்
அருகில் வருவதும் நீர்தானே
இரவில் நெருப்புத் தூணாய்
ஒளிர்ந்து செல்வதும் நீர்தானே

கருவும் உருவும் நீர்தானே
காப்பதும் கொடுப்பதும் நீர்தானே
உள்ளம் பள்ளத்தில் விழுந்தும் - எம்மை
மீண்டும் தேடுவதும் நீர்தானே
தந்தை தாயாய் அருகிருந்து - எம்மை
அணைத்து ஏற்பதும் நீர்தானே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்