101) இறைவா உன் தரிசனம் |
இறைவா உன் தரிசனம் நான் தேடி வந்தேன் உன் பாதம் சரணாகுவேன் - இறைவா உன் பாதம் சரணாகுவேன் என்றும் உன்னோடு நானும் உறவாட வேண்டுகிறேன் உன் பாதம் சரணாகுவேன் - இறைவா உன் பாதம் சரணாகுவேன் இறைவா உன் வார்த்தை நிதமும் கேட்க உன் பாதம் அமர்ந்துள்ளேன் - 2 (2) என்றும் உன் வார்த்தை நிஜமானது உன் வார்த்தை மாறாதது வானம் பொழிவதும் பூமி செழிப்பதும் உந்தன் வார்த்தையாலே இங்கு மக்கள் யாவரும் மகிழ்ந்து வாழ்வதும் உந்தன் வார்த்தையாலே - இந்த உலகெல்லாம் அழிந்து மண்ணோடு மறைந்தாலும் உன் வார்த்தை அழியாது உன் வார்த்தை அழியாதது (இறைவா) - 2 கீழ்வானம் சிவக்க விடியல் முழங்க உன் இராகம் இசைத்திடுவேன் - 2 (2) என்றும் உன் வார்த்தை ஒளியானது உன் வார்த்தை உயிருள்ளது பொய்மை அழிவதும் உண்மை நிலைப்பதும் உந்தன் வார்த்தையாலே - இங்கு நேர்மைப் பாதையில் மனிதர் நடப்பதும் உந்தன் வார்த்தையாலே நான் ஊரெங்கும் செல்வேன் உன் வார்த்தை சொல்வேன் உன் அன்பில் நிலைத்திருப்பேன் - 2 - இறைவா உன் அன்பில் நிலைத்திருப்பேன் |