Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   153) படைகளின் ஆண்டவரே  
படைகளின் ஆண்டவரே
எத்துணை அருமை உமதில்லம்
என்னான்மா இறையவனின்
ஆலய முற்றத்திற்கு விரைகின்றது

எம் உடலும் உள்ளமும் உமதில்லம்
நோக்கி வருகின்றது
இறைவனைக் காண - விழைகின்றது
அவரில்லம் நாட - மகிழ்கின்றது

அடைக்கலான் குருவிக்கு வீடும் உண்டு
வானத்துப் பறவைக்குக் கூடும் உண்டு (2)
உம் பீடம் கூடுவோர்க் இடம் உண்டு
உம் புகழ் சாற்றிட வலிமையுண்டு - (2)

பலநாள் உலகில் வாழ்ந்தாலும்
ஒருநாள் உமதில்லம் மேலானது (2)
வலிமையும் கேடயமும் நீரன்றோ
உந்தன் சந்நிதி வாழ்வன்றோ - (2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்