வருகைப்பாடல்கள் | ு |
ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா- 2 ஆனந்த பலியினிலே அருட்கொடை பெறவே ஆவலாய் நாமும் வந்திடுவோம் ஆலயம் தேடியே.... - 2 இயேசுவின் மக்களாய் ஒன்றினைவோம் அன்பினைப் பகிர்ந்து வாழ்ந்திடுவோம் - 2 ஆவலாய் நாமும் வந்திடுவோம் ஆலயம் தேடியே..... ஆஹா... ஆனந்த பலியினிலே அருட்கொடை பெறவே ஆவலாய் நாமும் வந்திடுவோம் ஆலயம் தேடியே..... தாயின் வயிற்றில் உருவாகிய நாள் முதலாக நம்மை என்றும் தாங்கிடுவார் தன் அன்பென்னும் கரங்களில் கண்ணின் மணி போல் காத்து தினம் வழிநடத்துகின்றார் தோள் கொடுத்து தாங்குகின்றார் தோழனும் ஆகிறார் கடவுளின் இரக்கத்தை அருளினைப் பாடவே.... வாழ்நாள் முழுதும் போதாதே.... நம்பிக்கை கொண்ட தம் இனத்தாரை கைவிடமாட்டார் ஆஹா... ஆனந்த பலியினிலே அருட்கொடை பெறவே ஆவலாய் நாமும் வந்திடுவோம் ஆலயம் தேடியே..... ஸாதபதபா / ரீபகபதா / ஸாகரிகரி ஸாகரிகரி / ஸாநிஸரிஸா ...../ ரிகரிஸா. தம்மீது அன்பு கூறும் மனிதர் அடுத்தவர் மீதும் அன்பு செய்து வாழ்ந்திடவே அழைப்பு விடுக்கின்றார் ஊன் இயல்பின் செயலை புறந்தள்ளியே புனிதராய் வாழ்ந்திடவே நல் மனிதராய் நிலைப்பது நம் கடமை அல்லவா இறைவன் விடுத்த கட்டளையை நிறைவு செய்வதே வாழ்வின் பணியாய் ஆகட்டுமே.... மூவொரு இறைவன் நம்மோடு என்றும் தங்கிடுவாரே.. ஆஹா... ஆனந்த பலியினிலே அருட்கொடை பெறவே ஆவலாய் நாமும் வந்திடுவோம் ஆலயம் தேடியே.....2 இயேசுவின் மக்களாய் ஒன்றினைவோம் அன்பினைப் பகிர்ந்து வாழ்ந்திடுவோம் - 2 ஆவலாய் நாமும் வந்திடுவோம் ஆலயம் தேடியே... ஆஹா-- ஆனந்த பலியினிலே அருட்கொடை பெறவே ஆவலாய் நாமும் வந்திடுவோம் ஆலயம் தேடியே..... |