168) புது யுகம் புலர்ந்தது |
புது யுகம் புலர்ந்தது புது இனம் மலர்ந்தது புதிய நல் இதயங்கள் எழுந்ததிங்கே பழமைகள் மறைந்தது புதுமைகள் நிறைந்தது இனிய நல் பலியினில் இணைந்ததிங்கே ஆகா...... வருக வருக இங்கு தருக தருக - நன்மை பெறுக பெறுக அருளை - 2 அன்பினில் நம்மை அரவணைக்க நம் அண்ணல் யேசுவே அழைக்கின்றார் பண்பில் நாளும் வழிநடக்க அவர் என்பின் வாவென அழைக்கின்றார் புது வானம் பூமி செய்வோம் - அற வாழ்வில் அமைதி காண்போம் 2 கிறீஸ்துவில் இனியொரு யுகம் மலர அவர் கிருபையும் இரக்கமும் கூடி வரும் நீதியின் நேர்மையின் சுடர் எரியும் - இனி நானிலமெங்கும் நலன் பெருகும் அன்பினால் உலகை வெல்வோம் நட்பினால் உறவு கொள்வோம் 2 ஒன்றே குலமென நாமிணைவோம் -இறை அரசின் குருத்துவ குலமென்போம் நம்மைத் தேர்ந்தது இறைபணிக்காய் - இனி நாளும் பகிர்ந்து நமைக் கொடுப்போம் இது தான் நமக்குத் திருநாள் |