85) இறையேசு அழைப்பேற்று |
இறையேசு அழைப்பேற்று - அவர் அன்பு வழிசென்று - புது வாழ்வு நாம் காணுவோம் - அதை நிறைவாக நாம் வாழுவோம் (2) நிறை வாழ்விது புதுவாழ்விது நற்செய்தி வழியாக சமநீதி நெறியாக இறைத் தந்தையில் அகமகிழ்ந்திட இறையரசினில் இகம் மலர்ந்திட பரலோக தந்தாய் உம் புகழ் பாடுவோம் - புது படைப்பாக எமை மாற்ற அருள் வேண்டுவோம் (2) வரலாறு புதிதாக உருவாக்குவோம் - அதில் வறியோரின் வருங்காலம் வளமாக்குவோம் (2) விடுதலையின் தீபங்களாய் விளிம்புகளே மையங்களாய் (2) இனி விளங்கிட என்றும் சிறந்திட - புது விடியலும் என்றும் புலர்ந்திட உயர்வென்றும் தாழ்வென்றும் நிலை மாறுமே -இனி உலகெங்கும் உள்ளங்கள் உறவாடுமே (2) விடிவெள்ளி என யேசு எழும்போதிலே விடுதலையின் நற்செய்தி பூபாளமே (2) இறைமகனின் தலைமையினில் - எளியவரின் தோழமையில் (2) புது உலகமும் நாம் படைத்திட - புது சமூகமும் அதில் அமைந்திட |