48) இதயங்கள் சங்கமம் |
இதயங்கள் சங்கமம் ஆகிடும் இடமிது இறைவனின் கருணையில் மலர்ந்திடும் உறவிது இறைவனே அழைத்ததால் இனியென்ன தடையுண்டு நிறைந்திடும் மகிழ்வுடன் ஆலயம் நுழைந்திடு உலகினில் உயிரினம் தோன்றிடும் முன்னர் உன்னதர் கிறிஸ்துவில் தேர்ந்து கொண்டார் உரிமையின் பிள்ளைகள் ஆக்கிய அவர் தம் உறைவிடம் இதுவே உவகையின் நிறைவே ஆதியில் சோதரர் வாழ்ந்ததின் நிறைவாய் அருட் ஜோதி பலியில் பங்கெடுப்போம் நீதியும் அன்பும் நெஞ்சினில் நிறைய நீதியின் தேவன் இல்லிடம் செல்வோம் |