192) வருவாய் வருவாய் |
வருவாய் வருவாய் இறைகுலமே நிறைவாய் மகிழ்வாய் மறைகுலமே இறையருள் தேடி நதியென ஓடி இறைவனில் இணையும் நேரமிது இதயங்கள் சுடர் விடும் நேரமிது வருவாய் வருவாய் இறைகுலமே 2 நிறைவாய் மகிழ்வாய் மறைகுலமே இருகரம் விரித்தே அழைக்கின்றார் திருப்பலி விரைவோம் வாருங்கள் தேற்றிடும் தேவன் அழைக்கின்றார் தாகமாய் இருப்போரே வாருங்கள் இறைவனின் இல்லத்தில் புகலிடம் தேடி 2 எழுகின்ற சுரங்களில் இன்னிசை பாடி நிறைவாழ்வு தேடிடும் மாந்தர்களே நிலையான தெய்வம் இயேசுதானே சுமைகளைச் சுமந்து வாடுவோரே சுகம்தரும் வல்லவர் இயேசுதானே இயேசுவின் இல்லத்தில் ஒன்றெனக் கூடி 2 புதுவாழ்வு பெறவே திருப்பலி நாடி |