36) ஆனந்த கீதங்கள் |
ஆனந்த கீதங்கள் முழங்கிட எழுவோம் ஆண்டவர் ஆலயம் நுழைந்திடுவோம் (2) வாருங்கள் வாருங்கள் வாழ்த்திடுவோம் (2) வான்புகழ் இன்னிசை இசைத்திடுவோம் விடியலின் வேள்விகள் படைத்திடவே விடுதலை வாழ்வினைப் பகிர்ந்திடவே (2) வாழ்த்திடு இறைகுலமே வணங்கிடு இறைவனையே புகழ்;ந்திடு பலியினிலே வளர்ந்திடு அன்பினிலே இறைவனைத் தேடிடும் உறவுகளே இறைவழி வாழ்ந்திட வாருங்களே (2) சமத்துவ உறவினிலே சங்கமம் ஆகிடவே உரிமைகள் அடைந்திடவே உறவினில் இணைந்திடவே |