Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் மனமே இறைவனின் சங்கமம்  

மனமே இறைவனின் சங்கமம்
மனிதம் உறவிலே சங்கமம்
இளமை தீபமே வாழ்விலே சங்கமம்
நிறை வாழ்வு பெறவே உன்னில் சங்கமம்
சங்கமம் சங்கமம் நாதனே
நான் உன்னில் சங்கமம் - 2

கடல்களே அலைகளில் சங்கமம்
கவிஞனே கவிதையில் உன் சங்கமம்
மனிதனே இறைவனில் சங்கமம்
புனிதனே அயலானில் இறை சங்கமம்

நெஞ்சமே நீதியில் சங்கமம்
நேர்மையே உண்மையில் உன் சங்கமம்
சிறுமைகள் படைத்தோனில் சங்கமம்
உணர்வுகள் உறவிலே சங்கமம்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்