Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   (ஆண்டவரின் இல்லம் தேடி வருகின்றோம்)  


ஆண்டவரின் இல்லம் தேடி வருகின்றோம்
ஆனந்தமாய் இறைமனிதம் ஆகிறோம்
தாயின் கருவில் நம்மை தேர்ந்த தெய்வம் அழைக்கிறார்.
அவரில் குடும்பமாகக் கூட்டுவோம்

வருக வருக அன்பிலே  எழுக எழுக அறிவிலே
ஒன்றி வாழும் உள்ள உணர்விலே  ஓன்று கலந்திடவே

இணைந்து வாழும் மனிதர் நடுவில் இறைவன் எழுகிறான்
இதயம் ஒன்றே வேண்டும் போது அருளைப் பொழிகிறார்
இகம் வாழ்திடும் உயிர்கட்கெல்லாம் அருளைப் புதுமையாக்குவோம்
இனிமையான பணிகளாலே உலகைப் புதியதாக்குவோம்
இறைவன் ஆட்சி மலர வேண்டும் மண்ணிலே
இதயம் சேர்ந்து இனிய குடும்பமாகவே
வருக வருக அன்பிலே எழுக எழுக அறிவிலே
ஒன்றி வாழும் உள்ள உணர்விலே ஓன்று கலந்திடவே


சிதறி வாழும் மனிதர் சேரக் கரங்கள் விரிக்கிறார்
சிதைந்து போன மனிதம் மீட்க உயிரைத் தருகின்றார்
உறவத் தாகம் கொண்ட அவரில் உள்ள கொண்டு வாழுவோம்
உருவில்லாத அவரில் மனித உறவுகளைக் காணுவோம்
இறைவன் ஆட்சி மலர வேண்டும் மண்ணிலே
இதயம் சேர்ந்து இனிய குடும்பமாகவே
வருக வருக அன்பிலே எழுக எழுக அறிவிலே
ஒன்றி வாழும் உள்ள உணர்விலே ஓன்று கலந்திடவே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்