வருகைப்பாடல்கள் | இறை உணர்வில் சங்கமிப்போம் |
இறை உணர்வில் சங்கமிப்போம் இறைகுலமே வருக திருப்பலியில் ஒன்றிணைவோம் திருக்குலமே வருக இறைவன் உறையும் ஆலயத்தில் இணைந்து மகிழ்வோம் வருக புனிதம் நிறைந்த அவர் பெயரை புகழ்ந்து தொழுவோம் வருக அனுபல்லவி வருவோம் இறைவனின் ஆலயம் பெறுவோம் அவர் தரும் ஆனந்தம் பனியை விட வெண்மையாய் பாலை விட தூய்மையாய் மலரை விட மென்மையாய் மாட்சியிலே மேன்மையாய் இருந்தவரும் இருப்பவரும் இதயத்திலே சுமப்பவரும் அழைப்பவரும் அணைப்பவரும் அனைத்தையுமே அறிந்தவரும் அவர்தானன்றோ அன்பின் ஆட்சியை அவரின் மாட்சியை அடையும் திருப்பலி இணைவோம் உண்மை தேவனின் உலக மீட்பரின் பலியில் கலந்திட விரைவோம் தருவதிலே தன்மையாய் தாங்குகின்ற ஏணியாய் உறவினிலே உண்மையாய் ஊறுகின்ற கேணியாய் நினைப்பவரும் நிலைப்பவரும் நிஜத்தினிலே நிறைபவரும் புரிந்தவரும் புரிபவரும் புவியினிலே அனுபவமும் அவர்தானன்றோ அன்பின் ஆட்சியை அவரின் மாட்சியை அடையும் திருப்பலி இணைவோம் உண்மை தேவனின் உலக மீட்பரின் பலியில் கலந்திட விரைவோம் |