Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  39) ஆனந்தமாக ஆண்டவர்  



ஆனந்தமாக ஆண்டவர் வீட்டுக்கு
அனைவரும் வாருங்கள் - நம்
ஆதரவாகும் அருளின் ஊற்றினில்
அனைவரும் பருகிடுங்கள்
இறைவன் நம்மை அழைக்கின்றார்
வாழ்வென்னும் பயணம் மகிழ்வாய் மாறிட
வழியினைத் தேடுங்கள்

சாதி சமயம் நாடு நிறம் என்றும்
பேதங்கள் இங்கில்லை
ஏழை செல்வரென்றும் கூலி எஜமானென்றும்
ஏற்றத் தாழ்வுமில்லை
மாந்தரெல்லாம் வாழ்ந்திடவே
மரித்த இயேசுவின் பாதையிலே
உழைக்க மனது கொண்ட உண்மை இதயங்களை
உன்னதன் தேடுகின்றார்

பசியும் பிணியும் என்றும் கேடு விபத்து என்றும்
பாடுகள் இல்லாமல்
பகையும் வெறுப்பும் என்றும் கோபம் பிரிவு என்றும்
பாதகம் இல்லாமல்
தரணி எல்லாம் வாழ்ந்திடவே
தன்னை ஈந்த நம் இயேசுவுடன்
தம்மை பிறர்க்களிக்கும் தகைமை இதயங்களை
தேவன் தேடுகின்றார்





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்