87) இறைவன் அழைப்பில் |
இறைவன் அழைப்பில் வரும் புது உறவு இதயம் இறங்கி வரும் இறை உறவு வானம் திறந்து வரும் வாழ்வுறவு - இங்கு வாரும் இணைவோம் இந்த உறவினிலே - புது வாழ்வு வழங்கும் திருப்பலியினிலே ஓடும் நதிகளைக் கரம் கொண்டு தடுத்தால் நதிகள் நிலைத்திடுமோ கூவும் குயில்களை குடி கொண்டு அழைத்தால் கூவமறந்திடுமோ பருவ மேகங்கள் உலகினைக் கவர்ந்தால் பரமன் அன்பு குறைந்திடுமோ அழைத்திடும் ஆயனின் அன்புக்குரல் கேட்டு ஆலயப் பீடம் கூடிடுவோம் எந்த நிலையில் நீ வாழ்ந்திருந்தாலும் ஏற்கும் தந்தையிவர் சொந்த உறவுகள் பிரிந்து சென்றாலும் தாங்கும் தாயுமவர் பந்தபாசம் நிரந்தரமில்லை பாசதேவன் மறப்பதில்லை வாழ்விக்கும் மருந்தை வானக விருந்தை தந்திடும் தேவன் வாழ்ந்திடவே |