Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   132) சங்கமம் இனிய சங்கமம்  
சங்கமம் இனிய சங்கமம்
ஆண்டவன் நம்மில் சங்கமம்
சங்கமம் இனிய சங்கமம்
நாம் அன்புடன் வாழ்ந்தால் சங்கமம்

அன்புடன் நட்புடன் அனைவரும் வாழ்ந்தால்
ஆண்டவன் நம்மில் சங்கமம்
உண்மையும் அறமும் உறவினில் மலர்ந்தால்
உலகத்தில் இறைவன் சங்கமம்

ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால்
சங்கமம் இனிய சங்கமம்
ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ்ந்தால்
சங்கமம் இனிய சங்கமம்
உடமைகளையெல்லாம் பகிர்ந்து வாழ்ந்தால்
சங்கமம் இனிய சங்கமம்
உலகத்தில் அமையும் இறைவனின் அரசு
சங்கமம் இனிய சங்கமம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் அழிந்தால்
சங்கமம் இனிய சங்கமம்
உறவினில் பகைமை இல்லையென்றால்
சங்கமம் இனிய சங்கமம்
இனவெறி அழிந்து இன்பமாய் வாழ்ந்தால்
சங்கமம் இனிய சங்கமம்
இறைவார்த்தைகளே வழித்துணையானால்
சங்கமம் இனிய சங்கமம:
இகமதில் அமையும் இறைவனின் அரசு
சங்கமம் இனிய சங்கமம்
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்