100) இறைவா உமது ஆலயமே |
இறைவா உமது ஆலயமே இறைமக்கள் இணைந்து வருகின்றோம் (2) இறைவா உமது திருப்புகழை இதயங்கள் மகிழ்ந்து பாடுகின்றோம் வாழ்க வாழ்க இறைவா - உம்மை வாழ்த்துகின்றோம் தலைவா (2) ஆண்டவரே உம் உறைவிடமோ எத்துணை அழகாயிருக்கின்றது அரணும் கோட்டையும் சூழ்ந்துள்ளதால் எங்கும் அமைதி மிளிர்கின்றது (2) நாங்கள் உம் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வோம் நாளெல்லாம் இசையுடன் புகழ்ந்திருப்போம் புகழ்ந்திருப்போம் உம்மை புகழ்ந்திருப்போம் வாழ்க வாழ்க இறைவா - உம்மை வாழ்த்துகின்றோம் தலைவா (2) ஆண்டவரே உம் மாளிகையில் நல்வாழ்வு நிறைவாயிருக்கின்றது நன்மைகள் எமக்கு நீர் செய்துள்ளதால் நாவினில் நன்றிப்பண் ஒலிக்கின்றது (2) நாங்கள் எம் சோதரர் நண்பருடனே நாளெல்லாம் இசையுடன் புகழ்ந்திருப்போம் புகழ்ந்திருப்போம் உம்மை புகழ்ந்திருப்போம் வாழ்க வாழ்க இறைவா - உம்மை வாழ்த்துகின்றோம் தலைவா (2) |