Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  43) ஆவியிலும் உண்மையிலும்  

ஆவியிலும் உண்மையிலும் வாழ அழைக்குது
ஆயன் இயேசு தன்னைத் தந்த அன்பின் பலியிது

உயிரில் கலந்த பலியிது
உறவை வளர்க்கும் பலியிது
நெஞ்சில் நிகழும் பலியிது
என்றும் அழியா பலியிது ஆ...ஆ...ஆ

இறைகுலமாய் இணைந்திட தவழ்ந்திடும் இறைப்பிரசன்னம்
ஓருடலாய் நம்மை மாற அழைக்குது
வாழ்க்கைப்பலி உடைந்திட எழுந்திடும் இறைப்பிரசன்னம்
நேர்வழியில் நம்மை வாழ அழைக்குது
வெள்ளமென இறையருள் உள்ளமெல்லாம் நிறையுது
வேற்றுமைகள் ஓடி மறையுது

உள்ளம் சொல்லும் வேண்டலில் பொங்கிடும் இறைப்பிரசன்னம்
அன்பு செய்ய நம்மை நாளும் அழைக்குது
நற்கருணை உணவினில் தங்கிடும் இறைப்பிரசன்னம்
அர்ப்பணிக்க நம்மை வாழ்வில் அழைக்குது
வாழ்வின் அர்த்தம் பலியினில் ஆழ்மனதில் பதியிது
பார்வை எங்கும் பாதை தெரியுது




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்