169) புலர்ந்தது புதுவாழ்வு |
புலர்ந்தது புதுவாழ்வு புதிய நல் இதயங்கள் புவியினில் மகிழ்ந்திட புலர்ந்தது புது வாழ்வு புலர்ந்தது புதுவாழ்வு இயேசுவின் அருளை இதயத்தில் ஏற்று இனிய நல் வாழ்வு இகத்தினில் வாழ்ந்து இறைமகன் கிறிஸ்து - 2 இறைபுகழ் போற்றி இடர் பலவென்று இனிதுடன் வாழ இன்பங்கள் துன்பங்கள் இனிதுடன் ஏற்று இதயத்தில் இயேசுவின் அருள் மொழி கேட்டு மறைபொருள் தேவன் - 2 மலரடி போற்றி மனத்திடம் கொண்டு மகிழ்வுடன் வாழ |