38) ஆனந்தம் பொங்கிட |
ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள் திருப்பலி பீடத்தில் தேவன் வருகிறான் திருந்திய உள்ளங்களில் அமைதி தருகிறான் ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள் வறுமையாவும் தீர இன்று வாழ்த்துப்பாடுவோம் பெருமை யாவும் நிலைக்க அவரில் சங்கமாகுவோம் அவரில் சங்கமம் வாழ்வில் சந்தோஉம் அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகொடுப்போம் சீடராக வாழ்ந்து காட்டுவோம் - எந்நாளுமே உறவில் வளர உண்மை வழியில் வாழ்ந்து காட்டுவோம் பகிர்வில் உயர அன்பில் மலர்ந்து பணிகள் ஆற்றுவோம் உன் பணி தொடர்வதால் சாட்சியாய் மாறுவோம் உன் வழி செல்வதால் உலகை மாற்றுவோம் சீடராக வாழ்ந்து காட்டுவோம் - எந்நாளுமே |