181) மங்கள நாளினிலே |
மங்கள நாளினிலே நாம் மகிழ்வோம் இயேசுவிலே பலியினில் இணைவோம் பகிர்ந்தே வாழ்வோம் படைப்போம் விரைவிலே - புது உலகம் நிறை வாழ்வினிலே மனிதம் மலரவே பணிவாழ்வினிலே பாதை ஆகுவோம் ஓர் காலம் ஓர் பூமி ஆனது போல் ஓர் மக்கள் என்றாகி வாழ்ந்திடுவோம் இயேசு நமது தலைவன் என்பதை உணர்ந்திடுவோம் உணர்ந்திடுவோம் உன்வழி நடக்க உடனே வருகின்றோம் உண்மையில் நடக்க உளமே அருளுவாய் எளியோர்க்கு எளியோராய் வாழ்ந்திடவே பணிவோடு எமையே தருகின்றோம் உமது ஒளியாய் உலகில் சுடர்விட வருகின்றோம் வருகின்றோம் |