வருகைப்பாடல்கள் | ு |
நல்லுறவில் இறை சமூகமாவோம்
- நம் இயேசுவின் அன்பினிலே இறையாட்சி வளர்ப்போம் அன்பாலே சேர்ந்து வந்தால் இறை சமூகமாவோம் ஆமா இறை சமூகமாவோம் அன்பில் இணைந்திருந்தால் இறையாட்சி மலரும் நம்மில் இறையாட்சி மலரும் அன்புதான் உறவுக்கு அடித்தளம் உறவுதான் உயிருக்கு அடைக்கலம் அன்பினிலே உறவு வரும் உறவினிலே நிறைவு வரும் நிறைவினிலே இறையாட்சி மலரும் - நம் அன்புதான் நீதியின் துவக்கம் நீதிதான் மானிட ஏக்கம் அன்பினிலே நீதி வரும் நீதியிலே வாழ்வு வரும் வாழ்வினிலே இறையாட்சி மலரும் - புது ஒற்றுமையே உலகின் தாகம் அன்புதான் அதற்கு பானம் அன்பிருந்தால் ஒற்றுமை வரும் ஒற்றுமையில் உயர்வு வரும் உயர்வினிலே இறையாட்சி மலரும் - மனித |