நற்குணங்களின் உறைவிடமே
உன்னத தேவனுக்கே உயிர்
கொடுத்தவள் நீ
தலைமைப் பொறுப்பை தாழ்மையூடன் ஏற்றவள் நீ
ஆம் என்ற சொல்லில் அடைக்கலமாகி
தியாகம் என்ற சொல்லில் தெய்வத்தின் தாயானாய்
அண்டி வந்தோரெல்லாம் அரவணைத்தவள் நீ
குறைகளையெல்லாம் நிறைவாக்கியவள் நீ
இதோ உன் தாயென்ற இறைமகனின் சொல்லுக்கு
செயல் உருவம் கொடுத்தவள் நீ
அன்றோ கபிரியல்
தூதரின் மங்கள
வார்த்தை.
இன்றோ மனிதர்களின் இதயத்து வேட்கை
உலகமக்களுக்கெல்லாம் உன்னதத் தாயே
எங்கள் விண்ணக மண்ணக இராக்கினியே
அருள் நிறைந்த கன்னியே, வாழ்க! வாழ்க!
அன்னையே நீர் வாழ்க!
அன்னை மரியா
ஆகாயத்தில் ஒளிரும் நிலவு போன்றவள் நீ
அந்த ஒளியில் நடக்க அனுமதிப்பாயா என்னை நீ
ஆலய முற்றத்தில் ஆசீர் அளிப்பவள் நீ
அதைப் பெற்றிட அனுமதிப்பாயா என்னை நீ
ஆகாயத்தை ஆட்கொள்ளபவள் நீ
அதில் அடைக்கலம் கண்டிட ஏற்பாயா என்னை நீ
அன்பிலே திளைக்கச் செய்பவள் நீ
அதை அண்டி அனுமதிப்பாயா என்னை நீ
வசந்தகால மலர் போன்றவள் நீ
வாடாமல் பார்க்க ஏற்பாயா என்னை நீ
வானமே உடலாகக் கொண்ட நீ
உன்னை பூஜிக்க அனுமதிப்பாயா என்னை நீ
அருள் தரும் திருப்பலி நம்மை அழைக்கின்றது. அன்னை மரியாவாக நாம் அவதாரம் எடுக்க நம் அயலாருக்கு
நாம் எப்போதுமே துணை புரிய அருள்
தரும் திருப்பலி நம்மை அழைக்கின்றது.
அன்னையின்
உதவும் உணர்வும் நம்மையே ஆட்கொள்ள அவர் மகன் யேசுவின் கல்வாரிப் பலி நமக்கு 1000 மடங்கு பலன்
தர நம்மை அன்போடு அழைக்கின்றது.
அன்போடு
ஜெபிப்போம். ஆற்றலைப் பெற்று அன்னையைப்
போலவே நடப்போம்.