Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   93) இறைவனின் திருக்குலமே  



இறைவனின் திருக்குலமே வருக
அரச குருகுலமே வருக (2)
கரையிலாக் கருணையில் கனிவுடன் காக்கும்
இணைலில்லா இறைவனின் திருவடி பாடி
மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து விரைந்து
பணிவோம் அவர் பதமே

தாயின் கருவில் தோன்றும் முன்பே தயவாய்
நம்மைப் பிரிந்தார்தனிப் பெரும்
கருணையில் நம் பெயர் எல்லாம் - நம்
கையில் பொறித்து வைத்தார்
தாயாக நாளும் சேயாக நம்மை
கண்போல காக்கின்றார்
நாமும் ஒன்றாகக் கூடி பண்பாடி பணிந்திடுவோம்

அரணும் கோட்டையும் கேடயமுமானவன்
அவர் புகழ் பாடிடுவோம்
வாழ்வும் வழியும் வலிமையும் ஆனவர்
அவரடி பணிந்திடுவோம்
வற்றாத நதியாய் அருள் வாரி வழங்கும்
பலிப்பீடம் சூழ்ந்திடுவோம்
உறவோடு வாழ்வோம் உலகோர்கும் உரைத்திடுவோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்