117)உன் இதய வாசல் |
உன் இதய வாசல் தேடி வருகின்றேன் என் இதயம் உறைய என்னில் வாருமே நீ இல்லையேல் நான் இல்லையே 2 நான் வாழ என் உள்ளம் வா காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம் உன் அன்பு என்றென்றும் மாறாதையா உன் நிழலில் நான் என்றும் வாழ்வேன் ஐயா குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம் நயமுடனே நண்பனும் உன்னை விட்டுப் பிரியலாம் உன் அன்பு என்றென்றும் மாறாதையா உன் நிழலில் நான் என்றும் வாழ்வேன் ஐயா உருவங்கள் மாறலாம் உருமாறிப் போகலாம் உருகும் மனம் கருகலாம் உலகம் என்னை வெறுக்கலாம் உன் அன்பு என்றென்றும் மாறாதையா உன் நிழலில் நான் என்றும் வாழ்வேன் ஐயா |