201) வாருங்கள் நம் ஆண்டவருக்கு |
வாருங்கள் நம் ஆண்டவருக்கு புதியதோர் பாடல் பாடுவோம் மீட்பளிக்கும் பாறையாய் அவரே மகிழ்ந்து பணிந்து பாடுவோம் - 2 வாருங்கள் நம் ஆண்டவருக்கு புதியதோர் பாடல் பாடுவோம் புகழ்பாக்கள் இசைத்துக் கொண்டு அவர் திருமுன் சென்றிடுவோம் இன்னிசை கீதங்கள் முழங்கிடவே அவர் திருமுன் அகமகிழ்வோம் ஏனெனில் அவரே நம் கடவுள் என்றென்றும் உள்ளது அவரிரக்கம் - 2 அன்பாலே நமைக்காக்கும் ஆண்டவர் திருமுன் பணிந்திடுவோம் ஆண்டவர் அவரை எந்நேரமும் நம் கண்முன் கொண்டிருப்போம் அவர் நம் வலப்புறம் இருப்பதனால் என்றும் அசைவுறுவது இல்லையே அவரே நமது உரிமைச் சொத்து அவரே நமது திருக்கிண்ணம் அகமகிழ்வோம் அக்களிப்போம் வாழ்வின் வழியைக் கண்டுகொள்வோம் |