Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  30) ஆயிரம் அலைகளாய்  



ஆயிரம் அலைகளாய் எழுந்திடுவீர்
ஆனந்த கீதங்கள் முழங்கிடுவீர்
ஆயிரம் தீபங்கள் ஒளி சிந்தவே
ஆலயம் நழைவோம் பலியாகவே
என்றும் வாழும் இறைவனைப் போற்றும்
நன்றியின் பலி இதுவே - 2

படைத்தவரே நம்மை அழைக்கின்றார்
பரமனுடன் அன்பில் இணைக்கின்றார் - 2
பிரிவினகள் மறந்து கூடிடுவோம்
இறை புகழை இணைந்து பாடிடுவோம் - 2
இறை பதமே புகழை இணைந்து பாடிடுவோம் - 2
அணி திரண்டு நாம் எழுவோம் இறை பதமே - அன்பில்
பணி சிறக்க நாம் தொழுவோம் இறை பதமே

புதுவுலகில் விடிவெள்ளி நாமாகலாம்
இறையரசின் கனவுகளை நனவாக்கலாம் - 2
இதயத்தை சுடராய் ஏற்றிடுவோம்
உலகெங்கும் புத்தொளியால் மாற்றிடுவோம்
அணிதிரண்டு நாம் எழுவோம் இறை பதமே - அன்பின்
பணி சிறக்க நாம் தொழுவோம் இறை பதமே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்