Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   83)  



124) புதுவானம் ஒன்றும்
புதுவானம் ஒன்றும் புது வையம் ஒன்றும்
இந்த பூமியில் மலர்ந்திடக் கண்டேன்

புதுவானம் ஒன்றும் புது வையம் ஒன்றும்
இந்த பூமியில் மலர்ந்திடக் கண்டேன் (2)
புது வாழ்வு ஒன்றும் புது ஆட்சி ஒன்றும்
இந்தப் பொழுதினில் புலர்ந்திடக் கண்டேன்
எங்கும் (இளமை - 3) எங்கும் (வளமை - 3)
எங்கும் புதுமை எங்கும் இனிமை

போவதோ பெரும் பயணங்கள் - நம்
பாதையில் எங்கும் தீபங்கள் (2)
நாவினில் இன்பக் கீதங்கள் - நம்
நெஞ்சினில் நன்றி உணர்வுகள்

வாவென்றே நம்மை அழைத்தவர் - முன்னே
போகின்றார் துணை ஆகின்றார் (2)
மாந்தர்கள் கரம் இணைக்கின்றார் - பெரும்
மகிழ்வினில் உடன் நடக்கின்றார்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்