Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   141) தீபத்தின் ஒளியினில்  
தீபத்தின் ஒளியினில் இணைவோம்
திருப்பலி செலுத்திட விரைவோம்
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட

நல் வாழ்வில் தீபங்களாய் - இங்கு
நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நம் வாழ்வின் தேவைகளை தினம்
நல்லோர்க்கு யேசு தந்திடுவார்
ஆண்டவர் இல்லம் தினம் வந்தால் - நம்
உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே
அன்பு செய்யும் உள்ளங்களே - இறைவனின்
அருள் பெறும் இல்லங்களே

இயேசுவோடு நாம் நடந்தால் - என்றும்
நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால் - இங்கு
உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே
வார்த்தை இங்கு மனுவானார் - நம்
வாழ்வினில் என்றும் குடிகொண்டார்
அன்பு செய்யும் உள்ளங்களே - இறைவனின்
அருள் பெறும் இல்லங்களே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்