Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   195) வசந்தமாய் அன்பில்  



வசந்தமாய் அன்பில் இணைந்திடும் பொழுது
வாருங்கள் இறை குலமே
நிறை வாஞ்சை மனதுடன் விண்ணக தேவனை
வழிபட வாருங்களே (2)
இறையருள் தரும் பலியிது ஆதவன் ஒளியிது
அர்ப்பணமாகிட வாருங்களே
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

வரண்ட மணலாய் வாடித் தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது (2)
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே (2)
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

எங்கும் நிறைந்த தந்தை வழிசெல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது (2)
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீகப் பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே (2)
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்